ஒரு ‘பத்து ரூபாய்’ தாள் எல்லாத்தையும் ‘காட்டி’ கொடுத்திடுச்சு…! ‘உங்கள எவ்வளவு நம்பினோம்…’ – கடைசியில நீங்களே ‘இப்படி’ பண்ணிட்டீங்களே…!

வீட்டின் சாவியை நம்பி கொடுத்து சென்ற அண்டை வீட்டார் வீட்டிலிருந்து பணத்தை திருடிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Chennai neighbor stole money house key after leaving

விழுப்புரத்தை சேர்ந்த துரை என்பவர், சென்னை பல்லாவரம் பகுதி பொழிச்சலூர் சிவசங்கர் நகர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். 38 வயதான இவர் மிக்ஸி கிரைண்டர் போன்ற பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து வருகின்றார்.

அதோடு துரையின் தாயார் கடந்த மே மாதம் 2-ம் தேதி இறந்ததாக தகவல் வரவே விழுப்புரம் விரைந்துள்ளார். ஊருக்கு செல்லும் போது வீட்டைப் பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் நந்தினியிடம் சாவியைக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

ஒரு மாதம் கழித்து கடந்த 7-ம் தேதி துரை சென்னை வந்துள்ளார். அடுத்த நாள் கடைக்கு செல்வதற்காக பீரோவில் இருந்த பணத்தை எடுப்பதற்கு சென்றபோது 84 ஆயிரம் ரூபாய் பணம் 31/4 சவர தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போனது தெரிய வந்தது

ஆனால் நந்தினியோ தான் வீட்டைத் திறக்கவில்லை எனவும் காணாமல் போனது குறித்து எனக்கும் எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் தொடர் விசாரணையில் எந்த துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில் நந்தினியின் கணவர் கள்ளச்சாராயம் வாங்கியதின் மூலம் மாட்டிக்கொண்டுள்ளார்.

பொழிச்சலூர் பகுதியில் நந்தினியின் கணவர் உமா சங்கர் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில்கள் வங்க சென்ற போது, அங்கு துரையின் நண்பர் ஒருவரும் சாராயம் வங்க வந்துள்ளார்.

அப்போது துரையின் நண்பரிடம் காசு கொடுத்து மது பாட்டில்களை வாங்கிய பிறகு மீதம் உள்ள தொகையை கொடுத்துள்ளனர். கொடுக்கப்பட்ட தொகையில் பத்து ரூபா நோட்டில் 4,500 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு துரையின் கையெழுத்து போடப்பட்டிருந்தது.

இதை பார்த்த துரையின் நண்பர், துரைக்கு போன் செய்து இதுகுறித்து கூறியுள்ளார். மேலும் இந்த காசை கொடுத்ததும் உமா சங்கர் தான் என மது விற்பனை செய்தவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து துரை சங்கர் நகர் போலீசாரிடம் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நந்தினி (28) மற்றும் இவரது கணவர் உமாசங்கர் (30)ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் பாணியில் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் தாங்கள் தான் பணத்தை திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 வெள்ளி கொலுசு, 3 1/4 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Contact Us