‘லவ்’ பண்றதுக்காக ‘நம்ம ஆளு’ நாடு விட்டு நாடு போறாப்புல…! எங்க தெரியுமா…? – என்ன ‘கொரோனாவால’ கொஞ்சம் ‘லேட்’ ஆயிடுச்சு…!

காதலிப்பதற்காகவே தைவானில் இருந்து ஜப்பான் கிளம்பும் வெள்ளை காண்டாமிருகம் எம்மாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

white rhino, travels from Taiwan to Japan to fall in love.

ஆசியாவில் பிடித்து வளர்க்கப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு திட்டத்தின் கீழ் வேர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர் நிறுவனம் எம்மாவை ஜப்பான் அனுப்புகிறது.

இந்த வகை காண்டாமிருகம் காட்டில் சுமார் 18,000 தான் எஞ்சியிருக்கிறது என்கிறது அந்த அமைப்பு. இதனால், 5 வயது எம்மா ஜப்பான் நாட்டின் டொபு உயிரியல் பூங்காவில் உள்ள மொரான் என்கிற 10 வயது ஆண் காண்டாமிருகத்துடன் ஜோடி சேர இருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 23 காண்டாமிருகங்களில் எம்மா மட்டுமே போட்டியில் வென்றுள்ளாள். எம்மா, தைவானில் இருக்கும் லியோஃபூ சஃபாரி பூங்காவில் இருந்து 16 மணி நேரம் பயணம் செய்து ஜூன் 8-ம் தேதி மாலை ஜப்பானில் இருக்கும் உயிரியல் பூங்காவுக்கு வந்து சேர்ந்ததுள்ளது.

எம்மா கடந்த மார்ச் மாதமே ஜப்பான் வருவதாக இருந்த நிலையில், கொரோனா வைரஸால் காரணத்தால் இப்போது வந்துள்ளது.

அதோடு, எல்லா காண்டாமிருக இனங்களும் மனித சுயநலத்திற்காகவே வேட்டையாடப்படுகின்றன. ஆண்மை பெருக்கத்துக்கும், புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுவதாகக் கூறி மோசடிக்காரரர்கள் காண்டாமிருகத்தின் கொம்பை கொள்ளை விலைக்கு விற்கிறார்கள்.

காண்டாமிருகத்தின் நகங்களையும், மயிரையும்போல அதன் கொம்பும் கேரட்டின் என்ற பொருளால் ஆனதுதான்.

இது புற்றுநோய் சிகிச்சையிலோ, ஆண்மை ஊக்கியாகவோ உண்மையாகவே பலன் பலன் தரும் என்று கூறுவதற்கு எந்த அறிவியல் ரீதியான நிரூபணமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Contact Us