கட்டுபாட்டை இழந்த ராணுவ விமானம்” …. “சிறுவன் உட்பட இருவர் தப்பி பிழைத்த அதிசயம்”…! “பிரபல நாட்டில்

மியான்மரில் ராணுவ விமானம் 14  பயணிகளுடன்  பின் ஓ லிவின் என்ற இடத்திற்கு  புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் அனிசகன்  என்ற பகுதியில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில்  விமானத்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விமானத்தில் பயணித்த சிறுவன் உட்பட இருவர் மட்டும் விபத்திலிருந்து தப்பி பிழைத்துள்ளனர். இதில் 2 புத்த துறவிகள் ,6 ராணுவ வீரர்கள் உட்பட14 பேர்  இந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ததாக  தகவல்கள் கிடைத்துள்ளது . மேலும் இந்த விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர் .

Contact Us