லண்டனில் ஒரு நாளைக்கு 1லட்சம் பேருக்கு இந்திய கொரோனா பரவும் நிலை தோன்றும்- விஞ்ஞானிகள்

பிரித்தானியாவில் இதே நிலை நீடித்தால், ஒரு நாளைக்கு 1 லட்சம் பேருக்கு இந்திய உரு மாறிய கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் சற்று முன்னர் எச்சரித்துள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 7,738 பேருக்கு இந்திய கொரோனா தொற்றியுள்ளது. இந்த நிலையில் சென்றால் ஜூலை மாதம் 12ம் திகதியளவில் ஒரு நாளைக்கு 1 லட்சம் என்ற விகிதம் தொற்று காணப்படும் என்று தரவுகளை ஆதாரம் காட்டி மருத்துவ விஞ்ஞானிகள் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்கள். எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில்… பொறிஸ் ஜோன்சன் இதற்கு ..  UK faces 100,000 cases EVERY DAY by July as Indian Covid variant drives up infections by more than a third over last week to 7,738 and Boris Johnson is warned by ministers lockdown rules will remain until next spring.

தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்கப்படுகிறது. 2020ம் ஆண்டு என்ன நடக்கப் போகிறது என்று இந்த விஞ்ஞானிகள் முன்கூட்டியே சொன்னார்களோ. அதுவே நடந்து முடிந்தது. மீண்டும் அவர்கள் எச்சரிக்கையை புறம் தள்ள முடியாது. விரைவில் சில இடங்களில் மீண்டும் லாக் டவுன் அறிவிக்கப்படும் நிலை தோன்ற உள்ளது. சில வேளைகளில் மீண்டும் பழைய லாக் டவுன் நிலை தோன்றவும் வாய்ப்புகள் உள்ளது தமிழர்களே. எனவே ஜாக்கிரதை. அன்றாட தேவையான பொருட்களை சற்று வாங்கி வைப்பது நல்லது. இறுதி நேரத்தில் கஷ்டத்தை தவிர்கலாம்.

Contact Us