வங்கிக்கு உள்ளே இருந்த 5 காஷ் பாயின்ட் மெஷீனை திருட முற்பட்ட கள்வர்- பிடிக்கச் சென்ற பொலிசாருக்கு கொரோனா பரப்புவோம் என்று மிரட்டல்…

பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் உள்ள வங்கி ஒன்றில், 5 தானியங்கி காசு கொடுக்கும் இயந்திரம் இருந்துள்ளது. இதனை எப்படியோ கண்டு பிடித்த கள்வர் கூட்டம் ஒன்றும், இரவோடு இரவாக குறிப்பிட்ட வங்கியை உடைத்து. அந்த 5 இயந்திரங்களையும் அப்புறப்படுத்த நினைத்துள்ளார்கள். இதில் இஷ்மயில் பாஃரூக் என்பவர், இதனை திட்டமிட ஏனைய 3 நபர்கள் கூட்டுச் சேர்ந்து இந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் நினைத்தபடி அந்த இயந்திரங்களில் காசு இருக்கவில்லை. அவை பிறிதொரு இடத்திற்கு செல்ல என அங்கே வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் சொல்லப் போனால்… இவர்கள்…

பொலிசாரிடம் மாட்டிக் கொண்டார்கள்.  கைது செய்யச் சென்ற பொலிசாரை நோக்கி இவர்கள் காறி துப்பியுள்ளார்கள். அத்தோடு தமக்கு கொரோனா உள்ளதாகவும் அதனை அவர்களுக்கு பரப்பாமல் விட மாட்டோம் என்று கூறி பொலிசாரை அச்சுறுத்தியும் உள்ளார்கள். வங்கிக் கொள்ளை, தனியார் கட்டடத்தை சேதப்படுத்திய, கூட்டுச்சதி என்று பலவேறு பிரிவுகளில் கேசைப் போட்டு பொலிசார் இவர்களை சிறையில் அடைத்துவிட்டார்கள்.

Contact Us