இலங்கை மக்களுக்கு பேரிடி; கோத்தா அரசு கவிழப்போகிறது!

கொரோனா தொற்றினால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு பேரடியாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இவ்வாறு கூறினார்.

எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவு எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் விலைகள் அதிகரிக்க வழிவகுக்கும் எனக் கூறினார்.

சமீப காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதியத்தின் விவரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே தொற்று மற்றும் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சுமையை ஏற்படுத்தாமல் அதிகரித்த எரிபொருள் விலையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை சுனில் ஹந்துநெத்தி வலியுறுத்தினார்.

Contact Us