லண்டன் வந்தாலே காசு கறக்கப்படுகிறது- தாயைப் பார்க்க வந்த பெண் 900 பவுண்டுகளை இழந்தார் !

பிரான்சில் வசிக்கும் 62 வயதுடைய பெண் Elizabeth Mackie. இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை கவனித்துக் கொள்வதற்காக பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தனியார் நிறுவனம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 946 பவுண்டுகள் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளது.

இதுகுறித்து Elizabeth கூறுகையில், பரிசோதனை மேற்கொள்வது தவறல்ல. அதன் விலை அதிகமாக இருப்பது தான் பிரச்சனை. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவரை காண்பதற்கு அவசரமாக சென்றுக்கொண்டிருக்கையில் இவ்வாறு கட்டணம் வசூலிப்பது அநியாயம் என்று கூறியுள்ளார்.பிரிட்டன் விதிகளின்படி, பிரான்சிலிருந்து வரும் மக்கள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அப்போது கொரோனா பரிசோதனை இரண்டு முறை மேற்கொள்ளப்படும். மேலும் பிரிட்டனிலிருந்து அவர்கள் திரும்ப பிரான்சுக்கு செல்லும் போதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அவர்கள், தனியாரிடம் தான் கட்டணம் செலுத்தி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆனால் பிரான்சில், பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் வாழிட உரிமம் பெற்றவர்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us