தண்ணீர் பிடிப்பதில் தகராறு… திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் எடுத்த விபரீத முடிவு; என்ன கொடுமை!

சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபா தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே செல்லும்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் பாமா,பிரபுதாஸ் ஆகிய இருவரும் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம் என மிரட்டியதாகவும் அதனால் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெண்ணின் தாய் கலாவதி புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றியதுடன் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பாமா மற்றும் பிரபுதாஸ் உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.

Contact Us