வவுனியாவில் ரகசிய திருமணம் சிக்கினர் பலர்!

வவுனியாவில் பயணத்தடையை மீறி நடந்த திருமணம், நடவடிக்கை எடுத்த சுகாதார பிரிவு.

இன்று வவுனியா தவசிகுளம் பகுதியில் பயணத்தையை மீறி சுகாதார நடைமுறைகளுக்கு பாதகமேற்படும் வகையில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட நபர் ஒருவரின் திருமண நிகழ்வில் காவல்த்துறை மற்றும் இராணுவத்துடன் அதிரடியாக புகுந்த சுகாதார பிரிவினர் அங்கிருத்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் கொரோனா தொற்று அஅதிகரித்துவரும் நிலையில் வவுனியாவில் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டியவர்கள் இவ்வாறு நடந்துகொண்டது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருமண நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us