செய்ய வேண்டியத ‘சிறப்பா’ செய்தாச்சு…! ‘இனி தைரியமா போய் பணம் எடுங்க…’; என்ன கொடுமைடா!

ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் காவலாளி செய்த சம்பவம் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Neem leaf security to protect corona ATM in namakkal

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஏடிஎம் இயந்திரத்தின் காவலாளி ஆறுமுகம் தினம்தோறும் செய்து வரும் காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏடிஎம் மையத்தின் காவலாளி ஆறுமுகம் நாள்தோறும் ஏடிஎம் இயந்திரத்திற்கு வேப்பிலை மற்றும் பூ வைத்து வருகிறார். இதனால், ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காது என நம்பவும் செய்கிறார்.

காவலாளியின் இந்த செய்கையால் கொரோனா வருமா வராதா என்பதை ஆராய்வதை விட, அங்கே பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என ஆறுமுகம் செய்யும் இந்த செயல் பாராட்டிற்குரியது என அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Contact Us