தெறி ஷூட்டிங்கில் மொட்டை ராஜேந்திரனுடன் விஜய்யின் மகன் எடுத்த போட்டோ கொஞ்சம் பழையது தான் !

தளபதி விஜய் போலீஸ் வேடத்தில்  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தெறி. இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா  படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து கலக்கி இருப்பார்.  படத்தின் போஸ்டர் வெளியிட்டு சமயத்தில் இருந்தே டபிள் ஆக்ஷன் படம் போன்ற தோரணையில் தான் போஸ்டர்கள் வெளியானது. படத்தின் இறுதி காட்சியில் விஜய் லடாக் பகுதியில் புதிய அடையாளத்துடன் தனது மகளுடன் செல்வது போன்ற காட்சி வைத்திருப்பார் இயக்குனர்.

அந்த வளர்ந்த மகளாக தளபதியின்  மகள் திவ்யா ஷாஷா நடித்திருப்பார். தெறி பேபி வசனம் இன்றளவும் பிரபலம் தான். இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் விஜய்யுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார். நேற்று சமூகவலைத்தள பக்கங்களில் மொட்டை ராஜேந்திரன் உடன் விஜய் அவர்களின் மகள் திவ்யா ஷாஷா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் இனைந்து எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டிங் ஆனது. இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.

 

Contact Us