ஃபர்ஸ்ட் இது ஒரு ‘பல்லி’ இனம் தான்னு நெனச்சோம்…! ‘அப்புறம் தான் தெரிஞ்சுது, இது ஒரு…’ – வியக்க வைக்கும் தகவல்கள்…!

மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், ஒரு புதிய வகை பல்லியினமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மேலும், இவை ஒரு மிகச்சிறிய பறவை அல்லது டைனோசராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, ஒகுலுடென்டாவிஸ் கவுங்ரே போன்ற இனத்தைச் சேர்ந்தவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Myanmar, fossils two organisms lived about 99 million years

மேலும், புதிதாக கண்டறியப்பட்ட இந்த இரண்டு புதிய மாதிரிகளில், தாடை எலும்புகளுடன் இணைக்கப்பட்ட பற்கள் மற்றும் அம்பரில் பாதுகாக்கப்பட்ட மென்மையான திசுக்கள் மூலம் இதன் முக்கிய உடல் பண்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதன்காரணமாக அவை புதிய வகை பல்லி இனமாக இருக்கலாம் என்று அடையாளம் கண்டனர்.

அதேபோல், ‘இதன் பாலியான்டாலஜிஸ்டுகளை சி.டி ஸ்கேன் செய்து தரவுகளை ஆராய்ந்த போது, மர்ம விலங்கு செதில்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். பற்கள் நேரடியாக தாடை எலும்புடன் இணைக்கப்பட்டிருந்தன. பொதுவாக டைனோசர்களின் பற்கள் ஒரு சாக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். தாடை எலும்புடன் அல்ல. எனவே இந்த புதைப்படிவங்கள் டைனோசர் இனத்தை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை. அது மிகவும் அசாதாரணமானது’ என ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

இரண்டு மாதிரிகளை பாதுகாப்பாக எடுத்து வைக்கும் போது அவை சிதைய ஆரம்பித்தது என்பதையும் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.

Contact Us