இந்த 2 ஈழத்து சிறுமிகளை கிருஸ்மஸ் தீவில் போட்ட அவுசி- குவியும் சர்வதேச அழுத்தம் என்ன நடந்தது ?

பில்லோவீலா குடும்பம் என்று அழைக்கப்படும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது தாருணிகா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பெர்த் நகருக்குக் கொண்டுவரப்பட்டார். அவருடன் தாய் பிரியாவும் வர அனுமதிக்கப்பட்டிருந்தது.தாருணிகாவின் உடல்நிலை பாதிப்படைந்ததால், பில்லோவீலா குடும்பத்தினரைப் பற்றிய கவலை பொதுவெளியில் மீண்டும் அதிகரித்தது. தாருணிகாவின் தந்தை நடேஸ், மூத்த மகள் கோபிகா ஆகியோரும் பெர்த் நகருக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்துள்ளார். இது நாள் வரை அவர்களை மனிதர்கள் வாழவே தகுதி இல்லாதா கிருஸ்மஸ் தீவில் தான் வைத்திருந்தார்கள். 2018 முதல் இந்த சின்னஞ் சிறிய சிறுமிகள் அந்த தீவில் பெரும் கஷ்டத்தில் இருந்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் குறித்த ஈழத்து குடும்பத்திற்கு ஆதரவாக இறுதியாக அவுஸ்திரேலிய மக்களே குதித்து விட்டார்கள். அது போக சர்வதேச அழுத்தமும் அதிகரிக்க ஆரம்பித்த நிலையில். வேறு வழி இன்று பேர்த் நகருக்குள் அவர்களை அனுமதித்துள்ளது அவுஸ்திரேலிய அரசு.

 

Contact Us