ஸ்டாலினுக்கு ஒரு சல்லியூட்- ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும்: மோடியிடம் வேண்டுகோள்

ஆரோக்கியமான வேண்டுகோள் பாராட்டுக்கள் முதல் அமைச்சருக்கு, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் – மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழ் நாட்டில் கொரோனா தொற்று, நீர் பற்றாக்குறை என்று ஆயிரம் தலை வலிகள் உள்ள நிலையில் கூட. ஈழத் தமிழர்களை நினைத்து, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஸ்டாலினை பாராட்டாமல் இருக்க முடியாது. இதுவரை ஸ்டாலின் மோடியிடன் எதனையும் கேட்க்கவில்லை. அதனால் இந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுகிறாரா பார்கலாம்.

ஸ்டாலின் சரியாக சாப்பிடுவது இல்லை, எந்த நேரம் பார்த்தாலும் சந்திப்பு என்று கிளம்பி விடுகிறார். என்று கூறி அவரது மனைவி துர்க்காவும் இம் முறை நானும் வருகிறேன் என்று கூறி டெல்லி கிளம்பி இருந்தார். இன் நிலையில் தான், ஸ்டாலின் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில். இந்தியாவின் பார்வை ஈழத் தமிழர்கள் பக்கம் திரும்பியுள்ள இன் நிலையில். ஸ்டாலின் அவர்கள் ஆதரவும், சேர்ந்து தமிழர்களுக்கு ஒரு விடிவை கொண்டுவராதா என்று பலர் எண்ணுகிறார்கள். அவை நடந்தால் நல்லதே…

Contact Us