பில்டப் பண்ணு… பேமண்ட் வாங்கு’!.. ‘பப்ஜி’ கேமில்… கதை, திரைக்கதை, வசனத்தோடு… பல ‘டிராமா’க்களை அரங்கேற்றிய ‘மதன்’!.. திடுக்கிடும் தகவல்!

‘பப்ஜி’ மதனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

pubg madan paid job for prasing his social service friends

யூடியூப் சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டுகளின் வழியாக சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது.

யூடியூபில் தம்மை புகழ்ந்து வீடியோ வெளியிடுவோருக்கு ரூ.5,000 மதன் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்மை புகழ்ந்து பேசியதற்கும், ஆபாச உரையாடலுக்கு உடந்தையாக இருந்ததற்கும், பெண் ஒருவருக்கு ரூ.5 லட்சம் மதன் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ‘பப்ஜி’ மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

‘பப்ஜி’ மதன் கைதான நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகளையும் பிடிக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், யூடியூப் சேனலில் மதனுடன் இணைந்து ஆபாசமாக பேசிய அவரது தோழிகளை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

Contact Us