உங்கள ‘இன்ஸ்டால்’ பண்ண வைக்குறதுக்காக தான் ‘அப்படி’ நம்ப வைக்குறாங்க…! ‘ஆக்சுவலா அவங்களோட பிளானே வேற…’ – கடும் எச்சரிக்கை விடுக்கும் போலீசார்…!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைப் போல வேகமாக பரவி வருகிறது போலி ஆக்சி மீட்டர் பயன்பாடு.

The use of fake oxymeters is spreading in Tamil Nadu.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பாதிக்கப்படுவோருக்கு பெரும்பாலும் மூச்சுத் திணறலும், நோயின் நிலை தீவிரமடையும் போது, இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவும் குறையும்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஆக்சி மீட்டர் பயன்பாடு அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து, ஆக்சி மீட்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ஒரு சிலர் கள்ள சந்தையில் போலியான ஆக்சி மீட்டரை விற்று வந்தனர்.

இதே ஐடியாவையும் பயன்படுத்தி போலி ஆக்சி மீட்டர் செயலிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும் போது மொபைல் போனில் இருந்து தனிப்பட்ட அல்லது பயோமெட்ரிக் தரவை திருடப்படுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் கைரேகை பதிவு செய்யும் இந்த செயலி மூலம் வங்கி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களும் திருடப்படுகிறது.

இதன்காரணமாக போலி ஆப்கள் அதிகமாக புழங்கும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதோடு தமிழகத்தில் போலி  ஆக்சி மீட்டர் ஆப் மூலம் தகவல் திருடப்படுவதாகவும், இந்த ஆப்களில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறை தனது முகநூல் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு ஏதாவது செயலி மேல் சந்தேகம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும், தங்களது பயோமெட்ரிக் தகவல்களை முடக்குமாறு www.uidai.gov.in என்ற இணையளத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

Contact Us