என்னது ‘தல’ தோனியும் அங்கேதான் இருக்காரா’!?.. சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரசிகரான அமைச்சர்.. தீவிரமான ரசிகர்!!

டெல்லியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.

delhi miniter duraimurugan meets dhoni family viral pic

அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

தோனியின் தீவிர ரசிகரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே, கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்த தோனியை, நேரில் சந்தித்தார். அப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்காக தோனிக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, வாழ்த்து தெரிவித்த துரைமுருகனுக்கு பதிலுக்கு தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற டி-ஷர்ட்டில் கையெழுத்துப் போட்டு பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் துரைமுருகன் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Contact Us