தாயின் அஸ்தியுடன் வந்த 11 மாத குழந்தை…. கண்ணீர் மல்க கட்டியணைத்த தந்தை….!!

தமிழ்நாட்டிலிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலவன் மற்றும் பாரதி என்ற தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளார்கள். இதனையடுத்து பாரதி துபாயில் பணிப்பெண் வேலை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்றுள்ளார். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பின் காரணத்தால் பாரதி இந்தியா திரும்பி வந்துள்ளார்.

அதன்பின் பாரதி கடந்த மார்ச் மாதம் மீண்டும் தன்னுடைய 11 மாத குழந்தையுடன் பணிப்பெண் வேலை செய்வதற்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் துரதிஸ்டவசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பாரதியின் உடலை அங்கேயே எரித்து விடும்படி அவருடைய கணவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாரதியுடன் துபாய்க்கு சென்ற 11 மாத கைக்குழந்தையின் நிலைமை குறித்த தகவல்களை அவருடைய தோழிகள் துபாய் நகரத்திலிருக்கும் தி.மு.க அமைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பாரதியின் 11 மாத குழந்தையின் நிலை குறித்த தகவல் கள்ளக்குறிச்சியின் எம்.பியான கவுதம சிகாமணிக்கு தெரிவிக்கப்பட்டதால் அவர் பாரதியின் 11 மாத குழந்தையின் நிலைமையை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனே தமிழக முதலமைச்சர் பாரதியுடன் துபாய்க்கு சென்ற குழந்தை இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன்பின் சுரேஷ் என்பவர் துபாயிலிருந்து குழந்தையை விமானம் மூலம் திருச்சிக்கு அழைத்து வந்து பாரதியின் கணவரான வேலனிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது நீண்ட நாள் கழித்து தன்னுடைய குழந்தையை பார்த்த தந்தை கண்ணீர் மல்க கட்டியணைத்து கொஞ்சியுள்ளார்.

Contact Us