சிலோன் தமிழர்களை காட்டி படம் எடுக்கப் போய்- பெரும் அடி வாங்கியுள்ள ஜகமே தந்திரம் படம்: பிளாப்…

கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்தை எடுத்து, பெரும் சுதப்பலில் கொண்டு போய் விட்டுள்ளார் என்பது தான் உண்மை. பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இது. கிட்டத்தட்ட 19 மொழிகளில் 190 நாடுகளில், உலகத்தரம் வாய்ந்த நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளிவந்தது ஜகமே தந்திரம்.மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது தான் உண்மை. சந்தோஷ் நாராயணன் இசையை தவிர படத்தில் எந்த ஒரு பாசிட்டிவான விஷயங்களை கூற முடியாது. எந்த அளவிற்கு பில்டப் செய்தார்களோ அந்த அளவிற்கு நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதில் கதை என்றும் ஒன்றுமே இல்லை. இலங்கை அகதிகளை முதலில் காட்டுகிறார்கள். பின்னர் லண்டனில் உள்ள டான் ஒருவரை காட்டுகிறார்கள். அங்க பாதி, இங்கே பாதி எறு கதையை கிளறி கிளறி போட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

பாலிவுட் இயக்குனர்கள் வாழ்த்துக்கள் கூறுவது, அடிக்கடி விளம்பரப்படுத்துவது என்று அலப்பறைகள் தாங்கவில்லை. ஒருவேளை தியேட்டரில் வந்திருந்தால் முதல் ஷோ ஓடி இருக்குமா.? என்பது சந்தேகம் தான். புத்திசாலித்தனமாக தயாரிப்பாளர்கள் ( S. Sashikanth, Chakravarthy Ramachandra) OTT தளத்திற்கு கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். தனுஷ் OTT தளத்திற்கு கொடுக்க வேண்டாம் என கூறியதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

என்னவென்றால் நெட்பிளிக்ஸ் தளத்தில் கொடுத்தால் உலக அளவில் இருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் இதனை பார்ப்பார்கள். இதனால் கண்டிப்பாக தனுஷின் மார்க்கெட் அடி வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் வேண்டவே வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார் தனுஷ். இதை விட சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால் நெட்ப்ளிக்ஸ் தளத்தின் லிங்கை ஷேர் செய்த கார்த்திக் சுப்புராஜின் பதிவுக்கு, தமிழ் ராக்கர்ஸ்-ன் HD டவுன்லோட் லிங்க்கை ரசிகர்கள் ஷேர் செய்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மொத்தத்தில் ஜகமே தந்திரம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தாலும், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது தான் மிச்சம்.

Contact Us