லண்டனில் செக்ஸ் குற்றவாளிகள் பாஸ்போட்டில் ஸ்பெஷல் முத்திரை குத்தப்படும்: லைசன்ஸிலும் தான் !

பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் எளிதில் தங்களின் பெயரை மாற்றிவிடுகிறார்கள். அதாவது சுமார் £42 பவுண்டுகள் கொடுத்தால், ஆவணங்கள் அனைத்திலும் பெயரை மாற்றிவிடலாம். எனவே அவர்களது பாஸ்போட் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்களில்(லைசன்சில்) ஆபத்தான நபர் என்ற முத்திரை ஒன்று குத்தப்பட உள்ளது. இதனை எடுத்துக் கொண்டு பெயர் மாற்றம் செய்யச் சென்றால், அதிகாரிகள் கண்டு பிடித்து விடுவார்கள் என்ற காரணம் தான்,

இது மட்டுமல்லாமல் நாட்டில் சுமார் 1,00,000 பாலியல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது கடவுச்சீட்டு அலுவலகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் காரணமாக சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் அவர்கள் தப்பிக்க முடியாமல் ஆகும் என்று தான் கருதுவதாக கூறுகிறார் அதிகாரி ஒருவர்.

இவர்கள் கடவுச் சீட்டில் ஆபத்தானவர்கள் என்று போடப்பட்டு இருந்தால், இவர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கே உள்ள அதிகாரிகள் உஷாராகிக் கொள்வார்கள் அல்லவா.

Contact Us