பயணக்கட்டுப்பாடு நேரத்தில் மது அருந்திவிட்டு வீடுபுகுந்து தாக்குதல்; பல பெண்கள் காயம்!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் மதுபோதையில் நின்ற நபர்கள் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

சுந்தரபுரம் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் மதுபோதையில் உள்நுழைந்த நபர்கள் அங்கிருந்த பெண்களின் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,மேலும் ஒரு பெண் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Contact Us