ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்’… ‘இந்த பெண்ணை ஞாபகம் இருக்கா’… ‘ஆனா இப்படி ஒரு ட்விஸ்ட்டா?’… அந்த பெண்ணின் கணவர் சொன்ன திடுக்கிடும் தகவல்கள்!

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெண்ணொருவர் பெற்றெடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

South African woman’s claim of giving birth to 10 babies hoax

தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கு முன்னர் 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறப்பட்டது. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது Gosiame Sithole 10 பிள்ளைகளைப் பெற்றெடுத்தது புதிய சாதனையாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

South African woman’s claim of giving birth to 10 babies hoax

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”Gosiame-ஐ என்னால் தொடர்பு கொண்டு அவர் சொன்னதைச் சரி பார்க்க முடியவில்லை.எனவே அவர் 10 குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை என்று நான் கருதுகிறேன். அதே நேரத்தில் தொலைப்பேசி தகவல் மற்றும் வாட்ஸ் அப் செய்தியைத் தவிர இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. நான் 10 குழந்தைகளின் புகைப்படங்களை இது வரை பார்க்கவே இல்லை. ஒரே ஒரு குழந்தையின் புகைப்படத்தை மட்டுமே எனக்கு அனுப்பினார்.

South African woman’s claim of giving birth to 10 babies hoax

அதற்கு அடுத்த நாள் எனக்கு Gosiame வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினார். அதில் 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் உதவியுடன் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் 29 வாரக் கர்ப்பத்தில் தனக்குப் பிறந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாகக் குழந்தைகளை யாரும் பார்க்க அனுமதி இல்லை என என்னிடம் கூறினார். ஒரு தந்தையாக என்னால் கூட எனது குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.

South African woman’s claim of giving birth to 10 babies hoax

பின்னர் தான் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், தானும் இன்னும் குழந்தைகளை இன்னும் பார்க்கவில்லை என Gosiame கூறியதாக அவரது கணவர் கூறியுள்ளார். இதற்கிடையே தற்போது வரை Gosiame எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால், அவரை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அவரது கணவர் Tebogo Tsotetsi தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே Gosiame அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 2 மருத்துவமனைகளிலும் அவருக்கு எந்தவொரு சிகிச்சையும், பிரசவமும் நடக்கவில்லை என மருத்துவர்கள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தன எனப் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது அது உண்மையா, பொய்யா என்பதே பெரும் மர்மமாக உள்ளது.

Contact Us