நடமாடும் ‘நகைக் கடை மனிதர்’ எடுத்த திடீர் விபரீத முடிவு; பலர் அதிர்ச்சியில்!

கழுத்திலும், கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு உலா வந்த அகமதாபாத்தின் நடமாடும் நகைக் கடை மனிதராக புகழப்படும் குஞ்சால் பட்டேல் திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகலை ஏற்படுத்தியது. மேலும் அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

ஹரி நாடார், வரிச்சூர் செல்வம் போன்ற நடமாடும் நகைக்கடை மனிதர்கள் நமக்கு பரிட்சயமானதை போல குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த குஞ்சால் பட்டேல் என்பவர் நடமாடும் நகைக் கடை மனிதராக குஜராத் மக்களால் வியந்து, ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிற நபராக இருந்து வருகிறார்.

வாகன கடனை சரிவர கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் தொழியில் ஈடுபட்டு வந்த குஞ்சால் பட்டேல், அகமதாபாத்தின் மாதோபுரா பகுதியில் உள்ள அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரின் வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என கூறிய போலீசார், அவரின் வீட்டில் இருந்து தற்கொலை குறித்த கடிதம் எதையும் கைப்பற்றவில்லை எனவும் தெரிவித்தனர்.

தற்கொலைக்கு முன்னதாக குஞ்சால் பட்டேலுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு சாலைகளில் வலம் வந்து மக்களிடையே பிரபலமாக திகழ்ந்து வந்த குஞ்சால் பட்டேலின் திடீர் மரணம் குஜராத் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் சிவ சேனா சார்பில் குஞ்சாப் பட்டேல் போட்டியிட்டு தோல்வியடைந்தது நினைவுகூறத்தக்கது.

Contact Us