ராணுவ பட்டங்களும் பறிக்கப்பட்டது- கடும் ஆத்திரத்தி உள்ள ஹரி: TV நிகழ்ச்சியில் இனி உளறுவார் …

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு கொடுக்கப்பட்டு இருந்த, ராணுவ பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் இனி ராணுவ உடை அணிய முடியாது. அத்தோடு அவர் அணியும் அரச உடையில், ராணுவ பட்டங்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பேட்ஜ்(பதக்கங்களை) அவர் அணியவும் முடியாத நிலை தோன்றியுள்ளது. இத்தனைக்கும் காரணம் அவர் அப்பா சார்ளஸ் தான். தனது மகன் தங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு சென்றாலும் பரவாயில்லை என்று அவர் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். ஆனால் பணத்தாசை பிடித்த ஹரி, அரச குடும்ப மானத்தை கப்பல் ஏற்றியுள்ளார். இதனால் கடும் ஆதிரமடைந்துள்ள சார்ளஸ்..

ஹரியின் 2வயது மகனும் தனது பேரனுமான ஆச்சேக்கு, இளவரசர் என்ற அந்தஸ்த்தை கொடுக்க மறுத்து விட்டார். அத்தோடு ஹரி அணியும் ராணுவ பதக்கங்களையும் பறித்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் அரச குடும்பத்தில் இருந்தே தள்ளி வைத்துள்ளார். இதனால் கடுமையாக கோபம் கொண்டுள்ளாராம் ஹரி. ஓப்பிரா நடத்தும் TV நிகழ்சியில், இனி அரச குடும்பத்தை மேலும் கிழி கிழி என்று கிழிப்பார் என்று கருதப்படுகிறது.

Contact Us