தமிழ் சினிமாவில் அடுத்த மரணம்.. பிரபல நடிகர் அமர சிகாமணி மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல தமிழ் நடிகர் அமர சிகாமணி அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.தமிழ் சினிமாவில் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் தொடர் மரணங்கள் நிகழ்ந்துவருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடிகர்கள் விவேக், மாறன், நெல்லை சிவா, பவுன்ராஜ், பாண்டு, இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த் ஆகியோர் மரணமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் அமர சிகாமணி அவர்கள் மாரடைப்பால் இன்று தனது 74 வது வயதில் உயிரிழந்தார். கலைமாமணி விருது பெற்றுள்ள நடிகர் அமர சிகாமணி அவர்கள் நடிகர் மட்டுமல்லாமல் கவிஞராகவும் அறியப்படுபவர். இவரது மறைவுக்கு ரசிகர்கள் முதல் பல்வேறு திரைபிரபலங்கள்வரை அனைவரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Contact Us