பப்ஜி மதனின் பாலியல் அத்துமீறல்கள்!.. இ-மெயில் மூலம் கசிந்த ரகசியம்!.. சென்னை சைபர்கிரைம் போலீஸ் திடுக்கிடும் தகவல்!

பப்ஜி மதன் குறித்து இ-மெயில் மூலம் வரும் புகார்களில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக சென்னை சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

pubg madan more complaints via email chennai cybercrime

அதைத் தொடர்ந்து, பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள், இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என சென்னை சைபர்கிரைம் காவல் துறையினர் மெயில் முகவரி அறிவித்திருந்தனர். ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ பதிவு செய்வதாக கூறி 159 புகார்கள் வந்ததிருந்தது.

இதில், 40 சதவீதம் பணமோசடியும், 60 சதவீதம் பாலியல் புகாரும், 2000 முதல் 50 ஆயிரம் வரை மோசடி என புகார்கள் குவிந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்களை எழுத்துப்பூர்வமாக அளித்தால் பணம் திரும்ப பெற்றுத் தரப்படும் எனவும், புகார் அளித்த அனைவருக்கும் மெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Contact Us