இல்லுமினாட்டி குறியீட்டுடன் பீஸ்ட் போஸ்டர்.. ஆகா, திரும்ப விஜய் கூடவே சாத்தானும் வருதே

தளபதி 65 படத்தின் போஸ்டர் பீஸ்ட் மோடில் வெளிவந்து கடைசியில் படத்தின் பெயரையே பீஸ்ட் என வைத்து விட்டனர். பீஸ்ட் போஸ்டர் பற்றிய டாப்பிக் தான் தற்பொழுது வரை ஓடிக்கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் தளபதி 65 ட்ரென்ட் முடிந்து இனி பீஸ்ட், Beast, Beast Poster என ட்விட்டரில் ட்ரெண்டிங் வருவது நிச்சயம்.

விஜய் படமும் அதிலுள்ள இலுமினாட்டி குறியீடுகளையும் பற்றிய செய்திகளை அவர் சில ரசிகர்கள் ஆர்வமாக ஆராய்ந்து வருவார்கள். அதேபோல் இன்று வெளிவந்த பீஸ்ட் படத்தில் என்ன இலுமினாட்டி சிம்பல் உள்ளது என ஆராய்ந்து அதனையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்கள் சொல்லுவது போலவே விஜய் படத்திலும் அப்படியே அமையும். ஏன் பிகில் படத்தில் கூட விஜய் இலுமினாட்டி சிம்பல் போட்ட டி ஷர்ட் போட்டு பாடினார்.  அதேபோல மாஸ்டர் டைட்டில்களில் சிம்பல் இருந்தன. இப்படி உதாரணமாக சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதேபோல் பீஸ்ட் படத்திலும் உள்ளது.

Contact Us