ஒருவர் பலி; வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பு தொடரும் பதற்றம்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் ஒன்று கூடிய பெருந்திரளான மக்களால் பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.

இதன்போது மக்கள் குறித்த துப்பாக்கிசூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பிவருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Contact Us