ஒரு லட்சம் SUBSCRIBERS!.. முடக்கப்பட்ட TOXIC MADAN 18+ யூடியூப் சேனலில் புதிய அப்டேட்’!.. சென்னை காவல்துறை THUG LIFE சம்பவம்!

Toxic Madan 18+ யூடியூப் சேனலை முடக்கிய சைபர் கிரைம் போலீசார், அதில் கொண்டுவந்துள்ள மாற்றம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

chennai cybercrime police toxic madan youtube channel

பெண்களை இழிவுபடுத்தியது, ஆபாச வார்த்தைகளால் மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் மதன் என்கிற மதன் குமார் மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு வலை வீசிய நிலையில் திடீரென தலைமறைவானார்.

பின்னர், சென்னை கொண்டு வரப்பட்ட மதன், விசாரணைக்குப் பிறகு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதனை ஜூலை 3ம் தேதி வரை பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மதனுடைய லேப்டாப், மெமரி கார்டு, இரு சொகுசு கார்கள் மற்றும் 4 கோடி ரூபாய் பணம் இருந்த கிருத்திகாவின் வங்கி கணக்கு ஆகியவை போலீசாரால் முடக்கப்பட்டது. மேலும், போலீஸ் விசாரணையில் மதனின் வீடியோக்களை அவரது நண்பர்கள் சிலரும், தங்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் பற்றிய விபரமும், மதனின் யூடியூப் சேனலில் பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் யார் என்கிற விபரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

இதற்கிடையே, மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கும் வேலையில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டனர். இது தொடர்பாக யூடியூப் நிறுவனத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மதனின் 5 யூடியூப் சேனல்களை முடக்கியது சைபர் க்ரைம். அதில் ஒன்றான Toxic Madhan 18+ யூடியூப் பக்கத்தின் முன்னுரையில் பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். நன்றாக படியுங்கள் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளார்.

Contact Us