அதிக குழந்தை பெத்துக்கோங்க’… ‘பம்பர் பரிசு தொகையை அறிவித்த அமைச்சர்’… சுவாரசிய சம்பவம்!

மிசோ மக்களிடையே கருவுறாமை விகிதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இது கவலைக்குரியதாக உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

₹ 1 Lakh For Parents With Highest Number Of Children

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கையை வெளியிட்டு அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராய்டே பேசும்போது, “எனது அய்ஸ்வால் கிழக்கு  தொகுதியில் அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

₹ 1 Lakh For Parents With Highest Number Of Children

அதோடு அந்த பெற்றோருக்குச் சான்றிதழும் கேடயமும் வழங்கப்படும். இதற்கான செலவை எனது மகன் நடத்தும் கட்டுமான ஆலோசனை நிறுவனம் ஏற்கும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறும்போது, “மிசோ மக்களிடையே கருவுறாமை விகிதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இது கவலைக்குரியதாக உள்ளது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருவதால் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த மக்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

₹ 1 Lakh For Parents With Highest Number Of Children

மிசோ போன்ற சிறிய சமூகத்தினர் அல்லது பழங்குடியினரின் முன்னேற்றத்துக்குக் குறைந்த மக்கள் தொகை ஒரு தடையாக உள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மிசோரம் மாநிலத்தில் 10 லட்சத்து 91,014 பேர் உள்ளதாக அமைச்சர்” தெரிவித்துள்ளார்.

Contact Us