சீரியல் நடிகை சித்ராவின் மரணத்தை பற்றி மோசமாக வந்த வீடியோ; அதிர்ந்துபோன சம்பவம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள நடிகர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை சித்ரா. முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்து மக்களை ரசிக்க வைத்தார்.

ஆனால் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எல்லோரையும் விட்டு பிரிந்துவிட்டார். அவரது மரணத்தை இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சித்ராவின் மரணத்தை வைத்து சிலர் கடந்த சில மாதங்களாக வியாபாரம் பார்த்து வருகிறார்கள். அதில் தவறான தகவல்கள் கூறுவது, சித்ராவின் இறப்பை அசிங்கமாக கூறுவது என செய்து வருகிறார்களாம்.

சித்ரா ஆவிடம் பேசுவது என சிலர் வீடியோ வெளியிட, மறைந்த சித்ராவின் ரசிகர்கள் சில மோசமான வீடியோக்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Contact Us