கொரோனாவால் இறக்கப் போகிறேன் – மகளையும் கொலை செய்ய வேண்டும் கடைசி நிமிடத்தில் நடந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியது !

லண்டனில் மிச்சத்தில் சுதா சிவானந்தம்(36) என்ற ஈழத்து தமிழ் பெண், தனது 5வயதான மகள் சாயகியை 15 தடவை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். கடந்த வருடம் ஜூன் 30ம் திகதி இந்தக் கொலை லண்டனில் நடந்தது. லண்டனையே புரட்டிப் போட்ட கொலைகளில் இதுவும் ஒன்று. அவரை பொலிசார் 11ம் திகதி செப்டெம்பர் மாதம் குற்றவாளியாக சார்ஜ் செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். தற்போது நடந்து வரும் இந்த வழக்கில் சில புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அது என்னவென்றால்…

அரச தரப்பு வக்கில் (Prosecutor Bill Emlyn-Jones) தற்போது நீதிமன்றில் தெரிவித்துள்ள கருத்தின் படி, தனக்கு தீர்க்க முடியாத வியாதி ஒன்று இருப்பதாக சுதா நினைத்து வந்தார் என்றும். மேலும் கொரோனா தொற்றி தான் இறக்கப் போவதாகவும். அது போன்ற நிலையில் தனது மகளை தனியாக இந்த உலகத்தில் விட்டுச் செல்ல முடியாது என்று கருதியே அவரை படுக்கை அறையில் வைத்து 15 தடவை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த கத்தியால், தன் கழுத்தையும் அவர் வெட்டியுள்ளார். ஆனால் அது மிகவும் மென்மையான வெட்டுக் காயம் என்கிறார்கள்.

இது இவ்வாறு இருக்க தனது மனைவி நல்ல ஒரு அம்மா என்றும். அவர் மனக் குழப்பத்தில் இந்தக் கொலையை செய்து விட்டார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வருடம் ஜூன் 30 திகதி அளவில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதனை மருத்துவமனை வட்டாரங்கள் தற்போது உறுதி செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த வழக்கில் சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம். தீர்ப்பு எப்படி அமையும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள். Source Sun : https://www.thesun.co.uk/news/15383013/mum-stabbed-daughter-death-terrified-covid/

Contact Us