சாத்தான்குளம் சம்பவம் போல் சேலத்தில் அடித்துக் கொல்லப்பட்ட முருகேசன்.. முக ஸ்டாலின் என்ன செய்தார் தெரியுமா.?

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது திமுக எம்பி கனிமொழி ஜெயராஜ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  தற்போது இதே போல் ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது, முருகேசன் என்ற வியாபாரியை போலீசார் அடித்து கொலை செய்துள்ளனர். முருகேசனை தாக்கிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமியின் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முருகேசன் குடிபோதையில் இருந்ததாகவும் அடித்தபோது உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் முருகேசன் குடும்பத்திற்கு பண உதவி செய்ய வேண்டும் என்று பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரும் கண்டனம் தெரிவித்து 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் அவர்கள் குடும்பத்திற்கு என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனையடுத்து முக ஸ்டாலின் முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Contact Us