இந்த கொடிய கொரோனா காலத்திலும் உங்க பந்தா குறையவில்லை; என்ன செய்திருக்கிறாங்க பாருங்க!

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்பது தான். இதனை கடைபிடித்து மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனாவை விரட்டி அடிக்க முடியும் என அரசு கூறி வருகிறது.

அந்த வகையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒருவர் தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற நபர் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்கை பிரத் யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருகிறார்.

உள்ளூர்வாசிகள் இவரை கோல்டன் பாபா என்றே அழைக்கின்றனர்.

தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us