‘இந்திய எல்லையின் பக்கம்’… ‘திபெத்தில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த சீனா’… கிளம்பியுள்ள பல்வேறு சந்தேகங்கள்!

இந்தியா – சீனா இடையில் ஏற்கனவே எல்லை பிரச்சனை உள்ளது.

China Launches First Bullet Train In Tibet, Close To Arunachal

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. திபெத் தலைநகர் லாசாவையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் வகையில், 435.5 கிலோமீட்டர் தொலைவிலான புல்லட் ரயில் வழித்தடத்தில் புல்லட் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

China Launches First Bullet Train In Tibet, Close To Arunachal

அத்துடன், எல்லை ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் புதிய ரயில் பாதை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார். புல்லட் ரயில் இயக்கப்படும் யிங்சி பகுதி, இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டி உள்ள நகரம் ஆகும். சீனா தொடர்ந்து திபெத் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், எல்லைப்பகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்தியா – சீனா இடையில் ஏற்கனவே எல்லை பிரச்சனை உள்ளதால், சீனாவின் இந்த புதிய புல்லட் ரயில் திட்டம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

China Launches First Bullet Train In Tibet, Close To Arunachal

சீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தலைநகரான செங்குடு பகுதியிலிருந்து துவங்கும் இந்த ரயில் திட்டம், யான் மற்றும் காம்டோ வழியாக திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசா வரை செல்கிறது. இதன் மூலம் செங்குடு முதல் லாசா வரையிலான 48 மணிநேர பயணம் 13 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us