என்னங்க சொல்றீங்க…! வேஸ்ட் பிளாஸ்டிக் வச்சு ‘இப்படி’ ஒரு கண்டுபிடிப்பா…? – அசத்திய எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்…!

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதன் கழிவுகளை அழிப்பது தலை சுற்ற வைக்கும் செயலாக இருக்கிறது.

Scientists discovered technology vanilla juice plastic
இந்த தகவல் தலை சுற்ற வைப்பதுடன், தற்போது வரை பிளாஸ்டிக்கை மக்கிப்போக செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறியவும் உலக விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் தீர்வு எட்டியபாடாக இல்லை.

இந்நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிர் தொழில்நுட்பவியல் விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியா மூலம் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை கொண்டு வெனிலா சாறு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

இந்த வெனிலின் வேதிப் பொருளானது வெனிலா எஸ்ட்ராக்ட் எனப்படும் வெனிலா சாறு தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப் பொருள் ஆகும். தற்போது வரை இந்த வெனிலா சாறு வெனிலா பீன்ஸ் எனப்படும் தாவரத்தில் இருந்துதான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெனிலா சாறு கேக், ஐஸ்க்ரீம், அழகு சாதனங்கள், மருந்துகள் மற்றும் பல வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதய கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை பெருமளவு குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Contact Us