231 கி.மீ நடந்தே சென்று நடிகர்கனை பார்க்க சென்ற பைத்தியங்கள் இவர்கள்தான்; நல்ல வைத்தியசாலையில் சேர்த்து விடுங்கள்!

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அடுத்து சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தீவிர ரசிகர்களான சந்தியா ஜெயராஜ், ரவி, வீரேஷ் ஆகியோர் ராம் சரணை நேரில் சந்திக்க நினைத்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமான பேருந்துகள் அதிக அளவில் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நடந்தே சென்று ராம் சரணை சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
ரசிகர்களுடன் ராம் சரண்
தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்திலிருந்து ஐதராபாத் வரை, நான்கு நாட்கள் 231 கிலோ மீட்டர்கள் இந்த மூவரும் நடந்தே சென்று ராம் சரணை சந்தித்துள்ளனர். நடிகர் ராம் சரணும் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து வரவேற்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Contact Us