கிணற்றில் தவறி விழுந்து தவித்த கொடிய விஷ பாம்பு; மனிதர்கள் செய்த உதவி!

கிணற்றில் தவறி விழுந்து தவித்த கொடிய விஷம் கொண்ட பாம்பு லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியில் குறைந்த அளவு நீர் இருந்த 50 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் பாம்பு ஒன்று தவறி விழுந்து தவித்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் நிகழ்விடத்திற்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பார்த்த போது அது கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு என்பது தெரிய வந்தது.

அதன் பின்னர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்து ஒரு பையில் வைத்து எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Contact Us