பேஸ்புக்கில் ‘ஹா ஹா’ எமோஜி பயன்படுத்துவது பாவம்: இஸ்லாமியர்கள் இதை செய்யாதிங்க!

பேஸ்புக்கில் ஹா ஹா எமோஜி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக ஃபத்வா பிறப்பிக்கலாம் என பிரபல இஸ்லாமிய மதகுரு ஒருவர் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.

ஆரம்பகாலங்களில் ஃபேஸ்புக் போஸ்ட்களுக்கு லைக் அல்லது கமெண்ட் என இரண்டு ஆப்ஷன்களில் மட்டுமே நம்மால் ரீயாக்ட் செய்ய முடிந்தது. ஆனால் தற்போது சோகம், கோவம், காதல், சிரிப்பு, கருணை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஹா ஹா எனப்படும் சிரிப்பு எமோஜி பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த ஹா ஹா எமோஜி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக ஃபத்வா பிறப்பிக்கலாம் என பரிந்துரைத்து பரபரப்பை கூட்டியிருக்கிறார் வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த அஹ்மதுல்லா என்ற இஸ்லாமிய மதகுரு, அங்கு மிகவும் பிரபலமான ஒருவராக விளங்கி வருகிறார். ஃபேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அஹ்மதுல்லாவை, ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் சுமார் 3 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். இஸ்லாமிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பேசி வெளியிட்டு வருவதுடன், தொலைக்காட்டி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பேசிவருவதால் அங்கு பிரபலமானவராக அவர் மாறியிருக்கிறார்.

கடந்த ஜூன் 19ம் தேதி அஹ்மதுல்லா ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள 3 நிமிட விடியோவில் ஃபேஸ்புக்கில் ஹா ஹா எமோஜி பயன்பாடு குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். மக்களை சிரிக்க அல்லது கேலி செய்ய பேஸ்புக்கின் “ஹாஹா” ஈமோஜியைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக “ஃபத்வா” வழங்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக அஹ்மதுல்லா கூறுகையில், ஃபேஸ்புக்கில் போஸ்ட்டுக்கு ஹா ஹா எமோஜி போடும் போது, அதனை போஸ்ட் செய்த நபர் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால் பிரச்னையில்லை ஆனால் ஹா ஹா எமோஜியை பயன்படுத்தி பிறரை கேலி, கிண்டல் செய்வதாக இருந்தால், இஸ்லாமை பொறுத்தவையில் இது பாவம் (ஹரம்). இஸ்லாமின் புனித புத்தகத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பிறரை கேலி, கிண்டல் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது என்றார்.

ஹா ஹா-ரியாக்டைப் பயன்படுத்துவது பேஸ்புக்கில் மிகவும் பொதுவானதாக மாறியுள்ளது, மேலும் ‘ஹா ஹா’ எதிர்வினைகளைப் பயன்படுத்தும் ஒருவர் பாவம் செய்கிறார் என்றும் இஸ்லாம் கேலி செய்வதைத் தடைசெய்கையில் அதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அஹ்மதுல்லா அந்த வீடியோவில் விளக்குகிறார்.

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும், ஒருவரைப் பார்த்து சிரிக்க ‘ஹாஹா’ ரீயாக்டை பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஹா ஹா எமோஜி குறித்து அஹ்மதுல்லா விளக்கிய வீடியோவினை பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்துள்ள நிலையில் அவரின் வீடியோவுக்கே ஆயிரக்கணக்கானவர்கள் ஹா ஹா ரீயாக்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us