இலங்கையில் கொடூர சித்திரவதை; ஆணி அடித்து தொங்க விடப்பட்ட இருவர்; கொடூரம்!

சமூக வலைதளத்தில் அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட இருவர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

பலகொல்ல பிரதேசத்தில் இருந்து அம்பிட்டிய பகுதிக்கு கடத்தி செல்லப்பட்ட இருவர் மீது பலகையில் வைத்து ஆணி அடிக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கண்டி பலகொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரும் கடுவெல போமிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயது நபரும் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அம்பிட்டிய பிரதேச மத குரு ஒருவரும் அவரது இரண்டு உதவியாளர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

Contact Us