புதிய தொழிலில் கால் வைக்கும் நடிகை நயன்தாரா; சத்தியமா அந்த மாதிரி தொழில் இல்லைங்க!

தமிழ் திரை உலகில் கடந்த 10 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது கலாதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனம்தான் “ரௌடி பிக்சர்ஸ்”. இந்நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம்தான் “நெற்றிக்கண்” இப்படத்திலும் இவரே கதையின் நாயகி. இந்நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகி விட்ட நயன்தாரா தற்பொழுது விநயோகஸ்தராகவும் மாறியுள்ளார். திரையுலகிற்கு இக்கட்டான இத்தருணத்தில் நயன்தாரா விநயோகஸ்தராக மாறியுள்ளமை பலராலும் பாராட்டப்படுகிறது.

இப்புதிய பதவி பற்றி அவரது கலாதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் “நயன்தாரா தனித்துவமான கதைக் களங்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து விநயோகிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவில் இருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது”. எனத் தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு பட்ஜெட்டில் தயாரித்து முடிக்கப்பட்ட படங்களை வாங்கி தனது நிறுவனத்தின் மூலம் வெளியிட எண்ணியுள்ளார். இவரது வெளியீடாக யுவன் சங்கர்ராஜாவின் இசையில் புதுமுக இயக்குனரின் “கூழாங்கல்” மற்றும் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “ராக்கி” படங்கள் வெளியாக உள்ளன.

Contact Us