ஏழை பாட்டி மகிழ்ச்சி சிரிப்பினை படம்பிடித்த போட்டோகிராபர் எடுத்துள்ள அதிரடி முடிவு!

முதல்வரின் பாராட்டுகளைப் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி பாராட்டுக்குரிய புகைப்படத்திற்கு காரணமாக இருந்த பாட்டிக்கு மாதம் இரண்டாயிரம் கொடுத்து உதவப் போவதாக அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் சார்பாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக 2000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் முதல் தவணை கொடுக்கப்பட்ட போது அதனைப் பெற்றுக் கொண்ட ஏழை பாட்டி ஒருவர் மகிழ்ச்சி சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தியதை நாகர்கோயில் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் அழகாக படம் பிடித்து இருந்தார். அந்தப் படத்தில் உள்ள எதார்த்தம் அதனை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக்கலைஞர் ஜாக்சனை நேரில் அழைத்து அந்த படத்திற்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் மிக முக்கியமான அந்த புகைப்படத்திற்கு காரணமாக இருந்த பாட்டிக்கு மாதம் 2000 ரூபாய் தன்னுடைய சம்பளத்தில் இருந்து கொடுத்து உதவப் போவதாக ஜாக்சன் தெரிவித்து இருக்கிறார்.

Contact Us