அண்ணன் தங்கை காதல்: விஷம் குடித்த காதலி சாவு: வாலிபர் உயிர் ஊசல்; வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு!

அண்ணன், தங்கை உறவுமுறை
 
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கோபி என்ற சசிகுமார். ஆடு வியாபாரி. இவருடைய மகள் ஸ்ருதி (வயது 18). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் பிரசாந்த் (வயது 20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 
 
இவர்களின் காதல், இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. இருவரும் அண்ணன்-தங்கை உறவுமுறை என்பதால் காதலுக்கு ெபற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஷம் குடித்த காதல் ஜோடி
 
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் காலை பிரசாந்த் தனது மோட்டார்சைக்கிளில் ஸ்ருதியை அழைத்துக்கொண்டு புதுப்பேட்டை அக்ராகரம் பகுதிக்குச் சென்றுள்ளார். 
 
அங்குள்ள ஒரு கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான காதல் ஜோடி இருவரும் விஷம் குடித்து விட்டனர். அதில் இருவரும் மயக்கமடைந்து கிடந்தனர். அந்த வழியாக சென்ற கிராம மக்கள் அவர்களை பார்த்து விட்டு நாட்டறம்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இளம்பெண் சாவு
 
உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஸ்ருதிக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேேய ஸ்ருதி இறந்து விட்டார். பிரசாந்த் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இது குறித்து ஸ்ருதியின் தந்தை சசிகுமார் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ருதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
காதலன் வீடு சூைற
 
ஸ்ருதி தற்கொலை ெசய்து கொண்ட தகவலை கேள்விப்பட்டதும் ஆத்திரமடைந்த அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் நேற்று முன்தினம் பிரசாந்த் வீட்டுக்குச் சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது,.
 
தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முறைப்படி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதன்பேரில் ெபண் வீட்டார் சமரசம் அடைந்தனர்.

Contact Us