மட் ஹனக்கின் அறைக்குள் கமரா பொருத்தியது யார் ? SUN பேப்பர் மீது பாயும் ஸ்காட்லான் யாட்

கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய சுகாதார அமைச்சர், மட் ஹனக்கின் லீலைகளை அடங்கிய வீடியோவை சன் ஊடகம் வெளியிட்டது. அவரது அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள பின் அறை ஒன்றில் வழமையாகவே மட் ஹனக் தனது காதலியை சந்தித்து சில்மிஷங்கள் செய்வது வழக்கம். இதனை நன்றாக அறிந்து தெளிந்த நபர் ஒருவர் சன் பத்திரிகைக்கு கொடுத்த தகவலை அடுத்து. யாரோ ஒரு நபர், பயர் எலாம் என்று சொல்லப்படும், தீ யை கண்டு பிடித்து சத்தம் போடும் இயந்திரம் ஒன்றில் கமராவை வைத்து, அந்த அறையின் கூரையில் பொருத்தி உள்ளார்கள். அதில் மட் ஹனக் செய்யும் லீலைகள் பதிவாகிய நிலையில்.

பின்னர் அதனை எடுத்து ஒரு நபர் ஊடகத்திற்கு கொடுத்துள்ளார். இது சன் பேப்பரின் தூண்டுதலில் தான் நடந்திருக்க வேண்டும் என்பது பிரித்தானிய அரசின் சந்தேகம். இதனால் இது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்யுமாறு ஸ்காட்லான் பொலிசாருக்கு அரசு கட்டளை பிறப்பித்துள்ளது. மட ஹனக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில். அவரது மனைவி, அவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் பெரும் பதவியை இழந்த மட் ஹனக் தற்போது தனது 15 வருட திருமண வாழ்கையையும் இழந்து விட்டார். எல்லாம் செக்ஸ் செய்யும் வேலை தான்.  ஆசை யாரை தான் விட்டது ?

Contact Us