சுறா படத்தை மரணமாக கலாய்த்த மாநகரம் பட ஹீரோ.. கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் தமன்னா முதலாவதாக ஜோடி சேர்ந்த படம் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 2010ல் வந்த சுறா. இப்படத்தில் தளபதி விஜய் ஒரு மீனவராகவும் தமன்னா பணக்கார வீட்டுப்பெண்ணாகவும் நடித்திருப்பார்.  வடிவேலு, விஜய் கூட்டணியில் அமோகமான தோல்வி கொடுத்த இப்படம் தளபதியின் 50வது படம் என்பதற்காக அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 2010ல் வெளியான இப்படம் 2021ல் சரியாக பத்தாண்டுகளுக்கு பிறகு ஒரு பிரபல நடிகர் சமூக வலைதளப்பதிவில் மீண்டும் பேசுபொருளாகிறது.

டுவிட்டிய நடிகர் வேறு யாரும் இல்லை “மாநகரம்”, “யாருடா மகேஷ்”, “நெஞ்சில் துணி விருந்தால்”, என தமிழின் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த “ராமகிருஷ்ண தெனாலி” படங்களின் நாயகன் “சுந்தீப் கிஷன்” தான். அவர் டுவிட்டர் பக்கத்தில் தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும். வெளியில் இருக்கும் வெப்பநிலைக்கு ஒதுங்கி படம் பார்த்ததாகவும் அதற்கு வெளியில் இருப்பதே மேல் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்படம் சுறா என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல கருத்தோ அல்லது கெட்ட கருத்தோ சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகும் “சுறா” பேசுபொருளாகியுள்ளது. இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Contact Us