“””மேதகு””” படத்தை சீமான் தடுக்க நினைக்கிறாரா ? வெளியான ஆடியோவால் மேலும் பரபரப்பு !

ஜூன் 25ஆம் தேதி கிட்டு இயக்கத்தில் மேதகு திரைப்படம் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியானது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு .இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் நாம் கட்சியில் இருந்து விலக்கி விட்ட கிட்டு, கல்யாணசுந்தரம் ஆகியோர் சேர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவதாக பேசியிருக்கிறார். மேலும் என்னால் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது. நீங்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பேசுகிறார். பிரபாகரனை இதில் தவறாகத்தான் சித்தரித்திருப்பார்கள் என்றும் சீமான் பேசியிருப்பதால் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.

இது ஒருபுறம் சீமான் பேசியது தானா என்று ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் சீமானுக்கு எதிரான கண்டன குரல்கள் அதிகமாக தொடங்கி இருக்கின்றன.

Contact Us