விருந்தில் ஆட்டுக்கறி இல்லை: கோபத்தில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த மணமகன்!

ஓடிசாமாநிலம் ஜஜ்பூரரை சேர்ந்த ராமகாந்த் பத்ரா( வயது 27) என்பவருக்கு கடந்த புதனன்று சுகிந்தா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தனது உறவினர் புடைசூழ வந்த ராமகாந்த் பத்ரா மணமகள் வீட்டிற்கு சென்று உள்லார். அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் ஆட்டுக்கறி இடம் பெறவில்லை என மாப்பிள்ளை வீட்டில் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்த தகவல் மணமகன் காத்திற்குச் என்றது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி வேறு ஒரு உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். ஆட்டுக்கறி போடவில்லை எம மணமகன் ராமகாந்த் கோபமடைந்து திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதே இரவில் புல்ஜாராவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ராமகாந்த் மணந்தார்.

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.மணப்பெண்ணின் தரப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸைத் தொடர்பு கொண்டால், குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Contact Us