தலீபான் பயங்கரவாதிகள் 159 பேர் கொன்று குவிப்பு – ராணுவம் அதிரடி!

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் அண்மை காலமாக தீவிரமடைந்து வருகிறது. பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் தரை வழியாகவும், வான் வழியாகவும் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 159 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நங்கார்ஹர், லாக்மன், கஜினி, காந்தஹார், ஹெரட் மற்றும் பாரா ஆகிய மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தரை வழியாகவும், வான் வழியாகவும் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 159 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த 49 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன. மேலும் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Contact Us