குடிப்பீங்களா என கேட்ட ரசிகர்.. தமிழ் நாடு திரும்பி பார்க்கும் அளவிற்கு பதிலளித்த நீலிமாராணி

தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நீலிமாராணி. இவர் நடிப்பில் வெளியான மெட்டி ஒலி, கோலங்கள் மற்றும் அத்திப்பூக்கள் போன்ற சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அந்த சீரியல்களில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்த போக சின்ன திரையில் ஒரு காலத்தில் பிஸியாக இருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன்பிறகு நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் இவருக்கு பெரிய அளவில் நடிகையாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தினார்.

நான் மகான் அல்ல, மன்னர் வகையறா போன்ற படங்கள் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சக்ரா. இப்படத்தில் ஒரே ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார். சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தங்களிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறிவருகின்றனர். அதற்கு ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்க வைத்திருக்கும் பல கேள்விகளையும் அவர்களிடம் கேட்க அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

அப்படி நீலிமா ராணியிடம் ரசிகர் ஒருவர் குடிப்பீங்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நீலிமா ராணி கொஞ்சமும் யோசிக்காமல் நான் நிறைய தண்ணீர் குடிப்பேன் மற்றும் ஜூஸ் குடிப்பேன் என பதிலளித்துள்ளார். அதாவது ரசிகர் கேட்ட கேள்வி சரிதான் ஆனால் தெளிவாக கேட்காதது தான் காரணம்.

அதாவது ரசிகர் நீங்க சரக்கு குடிப்பீங்களா என கேள்வி கேட்டு இருந்தால் நீலிமா ராணி சற்று யோசித்து பதில் கூறியிருப்பார். அவர் எதார்த்தமாக கேட்க அதனை நீலிமா ராணி சாதகமாக பயன்படுத்தி சூசகமாக பதிலளித்து தப்பித்துக் கொண்டார்.

Contact Us