கண்ணை மறைத்த பேராசை.. SI-யுடன் 15 வயது மகளை அனுப்ப ரூ 1 லட்சம்.. அதிர வைக்கும் மாதவரம் பெண்!

சென்னையில் 15 வயது சிறுமிக்கு மாதவரம் பால் பண்ணை எஸ்ஐ சதீஷ்குமார் துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், பெரியம்மா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதி எஸ்ஐ சதீஷ்குமார். இவருக்கும் அதே பகுதியில் நியாய விலைக் கடையில் பணிபுரிந்து வந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில கள்ளக்காதலாக மாறி பின்னர்இருவரும் தனிமையில் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

சதீஷ்குமாரும், அந்த பெண்ணின் கணவர் இல்லாத நேரங்களில் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது அந்த வீட்டில் இருந்த அந்த பெண்ணின் 15 வயது மகள் மீது சதீஷ்குமாருக்கு ஆசை ஏற்பட்டது. இதை வெளிப்படையாக அந்த சிறுமியின் தாயிடம் சொன்னார். மேலும் நிறைய பணம் தருவதாகவும் சிறுமியை சொகுசாக வாழ வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இதனால் பணத்தாசை பிடித்த அந்த பெண், தனது மகளுக்கு செல்போன் என்றால் மிகவும் பிடிக்கும், அதை வாங்கி வருமாறும் அதை வைத்து சிறுமியை நீங்கள் அடையலாம் என ஐடியா கொடுத்துள்ளார். இதையடுத்து சதீஷ்குமார் அந்த சிறுமிக்கு ஐபோன் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அதை சிறுமியிடம் கொடுத்த போது அதை அவர் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

உடனே ஐபோனை வாங்கிக் கொண்ட சிறுமியின் தாய், தான் சிறுமிக்கு பக்குவமாக புரிய வைப்பதாக கூறி சதீஷை அனுப்பிவிட்டார். இந்த 15 வயது சிறுமியை தன்னுடன் தனியாக அனுப்பி வைக்குமாறு பெற்ற தாயிடமே கூச்ச நாச்சம் இல்லாமல் கேட்டுள்ளார் சதீஷ்குமார். இதற்கு தாய் யோசித்த நிலையில் அவர் கையில் ரூ 1 லட்சத்தை கொடுத்துள்ளார் எஸ் ஐ சதீஷ். இந்த பணத்தை சிறுமியின் தாயும் , அவரது பெரியம்மாவும் ஆளுக்கு பாதியாக பிரித்து கொண்டனர். பின்னர் அடுத்த நாள் சதீஷ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடன் தனியாக செல்லுமாறு அந்த சிறுமியை இருவரும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறியதோடு தாய்க்கும் அந்த போலீஸ் எஸ்ஐக்கும் இருக்கும் கள்ளக்காதலையும் தந்தையிடம் சிறுமி தெரிவித்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதுகுறித்து எஸ்ஐ மீது புகார் அளிக்க முயன்ற தந்தையை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் சதீஷ்குமார். இதனால் புகார் அளிக்காமல் இருந்துவிட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு தாயின் உதவியுடன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் சிறுமி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த எஸ்ஐ சதீஷ்குமார், துப்பாக்கியை எடுத்து சிறுமியின் நெற்றியில் வைத்து மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ் குமார் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், பெரியம்மாவையும் கைது செய்தனர்.

தற்போது மகளீர் காவல் நிலைய பொலிசாரின் ஸ்பெஷல் கவனிப்பில் இருக்கிறார் இந்த எஸ்.ஐ சதீஷ்.

Contact Us